Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு:! 42 பூங்காக்கள் 11 விளையாட்டு திடல்கள்!! மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு:! 42 பூங்காக்கள் 11 விளையாட்டு திடல்கள்!! மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சென்னை மாநகராட்சியில் பத்து இடங்களில் 42 பூங்காக்களும்,11 விளையாட்டு திடல்களும் 2.0 திட்டத்தின் கிழ் அமைக்க மாநகராட்சி ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது. 42 பூங்காக்கள் 16.19 கோடி செலவிலும், 11 விளையாட்டு திடல்கள் 4.50 கோடி செலவிலும் கட்டப்படவுள்ளது.

2022- 2023 ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையில் கே.என்.நேரு சென்னையில் புதிய பூங்காக்கள் மற்றும் புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி சென்னையில் 2.0 திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட பத்து பகுதியில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது.

சென்னை திருவெற்றியூர் – 2 தண்டையார்பேட்டை-1 மாதவரம்-8 அம்பத்தூர் – 7
திரு.வி.க நகர்-3 ராயபுரம்-1 சோழிங்கநல்லூர்- 9 வளசரவாக்கம் – 7 அடையாறு-3 பெருங்குடி – 1 ஆகிய இடங்களில் 42 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காவில், மக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை,
குழந்தைகள் விளையாடும் பகுதி,திறந்தவெளி உடற்பயிற்சி கருவிகள்,குடிநீர் வசதி,
பொதுமக்களுக்கான கழிப்பறை வசதி,புல் தரை,
மின்சார வசதி,சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவையாக இருக்கும்.

இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு,ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கக்கன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version