தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

0
255
Diwali is not just a celebration! Here are the full details!

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

இந்துக்கள் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வரும் பண்டிகை தீபாவளி தான்.தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

மேலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது ,பட்டாசு வெடிப்பது மற்றும் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலரும் நினைத்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்கென சில வழிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.அந்த வகையில் தீபாவளி என்றால் வெறும் கொண்டாட்டத்திற்கு உரிய நாள் மட்டும் இல்லை அவை நமக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள பந்தத்தை உறுதி படுத்திக்கொள்ள முக்கியமான விரத நாளாகும்.

தீபாவளி அன்று நாம் அணிந்து கொள்வதற்கென புத்தாடை வாங்கும் பொழுது முதலில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு வஸ்திரம் வாங்க வேண்டும்.மேலும் நம் வீட்டின் அருகில் உள்ள கோவில்களில் உள்ள விக்ரஹங்களுக்கு புத்தாடை வாங்கி கொடுப்பது சிறப்பு.மேலும் நம் வீட்டிற்கு வருபவர்கள் ,வசதி இல்லாதவர்கள் ,தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு புத்தாடை ,இனிப்பு ,பட்டாசு வாங்கி கொடுப்பது சிறந்தது.

ஒவ்வொரு தீபாவளியன்றும் ஓவ்வொரு தேவதைகளும் மக்களுக்கு ஆசி வழங்குகின்றனர்.அப்போது நம் வீட்டில் வைத்துள்ள தண்ணீரில் கங்கா தேவி எழுந்தருளுகிறாள்.மேலும் தீபாவளி அன்று காலை மூன்று மணி முதல் 5.30 மணி வரை சுடுதண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்கிறாள்.

நல்லெண்ணையில் மகாலட்சுமியும் ,சீயக்காய் போன்ற பொருட்களில் தேவர்களும் வாசம் செய்கின்றனர்.அவர்களின் ஆசி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதால் நாம் வீட்டில் உள்ள பெரியவர்களின் கையில் நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து சுடுதண்ணீரில் குளிப்பதன் மூலம் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகின்றோம்.இதுவே தீபாவளி திருநாள் என கூறப்படுகின்றது.