தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ!
தீபாவளி குறித்த புராண கதைகளில் கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நேரத்தில், மரணிக்கும் நேரத்தில் இருந்த அந்த நரகாசுரன் தான் இறக்கும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையாக அந்த நாள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை:
நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் தான் நரகாசுரன்.
திருமால் அசுரர்களை அழிக்க சென்ற அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் நரகாசூரனுக்கு அசுர சுபாவம் இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்று மாறியது .
நரகாசுரன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேரு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார்.

அவரிடம், அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்கவேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.