பண்டிகை காலத்தில் சிறப்பு விற்பனையாக கார் மற்றும் பைக்குகளை வாங்குவதற்கு ட்ரூம் நிறுவனம் பண்டிகைக்கால ஆஃபரை அறிவித்துள்ளது.
பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மறுபடியும் உற்பத்தி செய்து ட்ரூம் நிறுவனம் விற்று வருகிறது. எனவே பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மிக குறைந்த விலையில் “ட்ரூம் தீபாவளி தமாகா” என்ற திட்டத்தின் கீழ் பழைய கார் மற்றும் பைக்குகள், ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் மக்கள் வாங்கி செல்ல தீபாவளி சிறப்பு விற்பனையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தனக்கு என்று சொந்த கார் பைக் ஸ்கூட்டர் என ஏதாவது ஒரு வாகனம் தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை மக்களின் தேவையாகவே ஆகின்றது. அதற்கு ஏதுவாக ட்ரூம் நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
அக்டோபர் 26 முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகைகள் இருக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே கார் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் வாங்க நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.