டி எம் சௌந்தரராஜன் எம்ஜிஆர்க்காக பாடிய முதல் பாடலில் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்!!

0
98
DM Soundararajan's first song for MGR had a huge problem!!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களாக விளக்கிய எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு தன் பாடலின் மூலம் குரல் கொடுத்த டி எம் சௌந்தரராஜன் அவர்கள், எம்ஜிஆர் காக முதன் முதலில் பாடிய பாடல் ஒன்றை எழுந்த சிக்கலை இந்த பதிவில் காண்போம்.

நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் நாயகனாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் துணை வேடங்களில் நடித்த அவர், பின்னாளில் பெரிய ஹீரோவாக மாறினாலும், அவரை மாஸ நயகனாக மாற்றிய படம் மலைக்கள்ளன்.

1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மலைக்கள்ளன்.நாமக்கல் ராமலிங்கம் கதை திரைக்கதை எழுதிய இந்த படத்திற்கு, மு.கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் சார்பில் ஸ்ரீராமுலு நாயுடு படத்தை தயாரித்து அவரே இயக்கி இருந்தார்.

இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் ஒரு பாடலின் பல்லவியை எழுதி முடித்து சரணம் எழுத தொடங்கியுள்ளார். அப்போது இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுடன் இவருக்கு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கோபித்துக்கொண்டு கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் சென்னை திரும்பி விட்டார்.

எம்.ஜி.ஆர் மேக்கப் ரூமுக்கு சென்றபோது ஒரு சிறுவன் இதன் பல்லவியை பாடிக்கொண்டிருந்துள்ளார்.இந்த பாடலை கேட்ட, எம்.ஜி.ஆர் இந்த பாடலை யார் எழுதியது எந்த படத்திற்காக எழுதியது என்று விசாரித்தபோது கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் நீங்கள் நடித்து வரும் படத்திற்காக எழுதியது என்று கூறியுள்ளனர். மேலும், இசையமைப்பாளருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து கூறியுள்ளனர்.

இந்த வரிகளின் மூலம் கவர்ந்திழுக்கப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் கவிஞர் தஞ்சை ராமையாவிடம் சென்று இந்த பல்லவிக்கான முழு பாடலையும் எழுத சொல்லி கேட்டுள்ளார். அதற்கு விடாப்படியாக அவர் மறுக்கவே, உங்களுடைய வரிகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கேட்டு அந்த வரிகளை பெற்று வந்திருக்கிறார் நடிகர் எம் ஜி ஆர்.

அதன்பின் அந்த வரிகளை கொடுத்து அதற்கு ஏற்றவாறு பாடலை எழுதுமாறு தெரிவித்திருந்திருக்கிறார்.இதற்கு ஏற்றவாறு யாரையாவது வைத்து எழுத சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, கோவையை சேர்ந்த கோவை அய்யா முத்து என்பவரின் ஞாபகம் வந்துள்ளது.

அதன்பிறகு அவரை வரவழைத்த சுப்பையா நாயுடு, பாடலுக்கான சுட்சிவேஷன், மற்றும் பல்லவியை சொல்லி சரணத்தை எழுதுமாறு சொல்ல, அவர் சிறிது நேரத்தில் அனைத்தையும் எழுதி கொடுத்துள்ளார்.

இவ்வாறான சிக்கலில் உருவானது தான், ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே” என்ற பாடல். இது இன்று வரையில் ரசிகர்களால் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வரும் பாடல் ஆகவும் விளங்குகிறது.