தேமுதிகவிற்கு டாட்டா காட்டிய மாவட்டச் செயலாளர்!

0
123

தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

2005ஆம் ஆண்டு தேமுதிகவை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த் அதன் பின்பு வந்த சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் நின்று வெற்றி வாகை சூடினார். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் இன்று 29 தொகுதிகளை வென்றார். அதன்படி 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக திரு. விஜயகாந்த் அமர்ந்தார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தன்னை இணைத்து கொண்டு போட்டியிட்ட அந்த கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வியை தான் சந்தித்தது.

விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக சென்று வந்த நிலையிலே, அவர் வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுத்து வருகின்றார் இதன் காரணமாக, கட்சி பணிகளை அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். சமீப காலத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட விஜயகாந்த் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன், ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நல கூட்டணி சார்பாக போட்டியிட்டவர் இந்த மதிவாணன்.

இதற்கு காரணம் தேமுதிக விஜயகாந்த் கண்ட்ரோலில் இல்லாததே என்று தெரிவிக்கிறார்கள். திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிவாணன் 41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தேமுதிக தெரிவிப்பதில் இருந்து, கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரிகின்றது தேமுதிகவில் நடக்கும் எதுவும் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு தெரியாது என்று தெரிவித்தார் மதிவாணன்.