திமுகவுடன் கூட்டணியில் இணைய போகும் தேமுதிக- அதிர்ச்சியில் உறைந்த அதிமுக தரப்பினர்.

0
142

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவே பாமக கேட்கும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுத்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று பாமக தரப்பில் கூறிவருகிறார்கள்.அதேபோல் தற்பொழுது தேமுதிக தரப்பிலும் எங்களுக்கு 41 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் தேமுதிகவின் எந்த கோரிக்கைக்கும் அதிமுக தரப்பு செவிசாய்க்காததால் கூட்டணியை விட்டு வெளியேற போகிறோம் என்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தேமுதிகவின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார் இதுபற்றி அதிகாரப்பூர்வமான முடிவு நாளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாது தேமுதிகவின் நிர்வாகிகளை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ரெடியாக இருக்குமாறு கூறியிருந்தார்.

அதிமுகவின் கூட்டணியில் ஏற்கனவே பாமக பிஜேபி போன்ற கட்சிகள் உள்ளதால் தேமுதிக கேட்கும் 41 தொகுதிகள் அதிமுக தரப்பில் ஒதுக்கப்படுவது மிகவும் கடினம் என்பதாலும் முன்பு உள்ளது போல தேமுதிகவுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை(2016 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக வின் ஓட்டு சதவீதம் 2.5%) என்பதாலும் சசிகலாவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்ததாலும் அதிமுக தரப்பு அவர்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது இதை உணர்ந்த தேமுதிகவினர் தனித்துப் போட்டியிடுவது அல்லது திமுகவின் கூட்டணியில் இணைவது என்று முடிவை எடுக்கப் போகிறார்களாம்.

பாமக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைக்காது என்று பிரேமலதா பேசியுள்ளார் இதை வைத்து பார்க்கும் போது நிச்சயமாக தேமுதிக திமுகவுடன் தான் கூட்டணி வைக்கப்போகிறது என்று உறுதியாக சொல்லலாம்.திமுகவின் கூட்டணியில் தேமுதிக இணைந்தால் திமுகவுக்கு மேலும் பலம் தான் அதிகமாகும் என்று அரசியல் ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது நாளை நடைபெற உள்ள தேமுதிக நிர்வாக குழுவில் தான் தெரியும்.