ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவேன் என்று கூறிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று அதிமுக பொது செயலாளர் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று தேமுதிக வும் ஆதரவு தெரிவித்துள்ளது.
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் பசும்பொன் முத்துராமலிங்க குரு பூஜையில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை உடன் வந்துள்ளேன் அதன் பின் இப்போது வந்துள்ளேன்.
நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு நடிகர் விஜய் மாநாட்டை நடத்தியுள்ளார். அதற்கு என் வாழ்த்துக்கள். நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்தவன். அண்ணன் நடிகர் விஜய் ஒரு கட்சி தொடங்கி ஒரு கருத்தை சொல்கிறார், அவர் ஒரு மாநாட்டை நடத்தியுள்ளார்.
அதிகார பகிர்வு அனைத்து கட்சிகளுக்கும் வலியுறுத்துகின்றன நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம் அதனால் வரவேற்கிறோம் என்றார்.தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தவெக தலைவர் விஜய் பேசிய கருத்துக்களை வரவேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது