கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய உத்தரவை போட்ட திமுக தலைமை! பரபரப்பான கூட்டணிக் கட்சிகள்!

0
102

தமிழகத்திலே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அதோடு மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு செய்தும் வருகிறார்கள். அதோடு அதற்கு மேல் ஒரு படி போய் ஒரு சில வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டிற்குச் சென்று துணிகள் முதல்கொண்டு துவைத்து கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.இதையெல்லாம் பார்த்த இளைஞர்கள் இதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் தேர்தல் முடிந்தால் அதன் பிறகு அவர்களை நீங்கள் கண்ணில் கூட பார்க்க முடியாது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறது.அந்த கட்சி இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முழு மூச்சாக இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் இந்த கடுமையான உழைப்பிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் இந்த வரை நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.இந்த நிலையில், திமுகவின் மாநில மாநாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்றது. அதேபோல திமுகவில் இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மற்றொரு மாநாட்டை நடத்துவதற்கு அந்த கட்சி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

அந்தவகையில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கின்றன. அதில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்க இருக்கிறார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதி சேலத்தில் திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுகவின் தலைவர் வைகோ. காதர் மொய்தின், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டம் சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் மாவட்டத்தில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் இதனை கண்ட எதிர்க்கட்சி சற்று அதிர்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் நீழ்ச்சியாக தான் இந்த பொதுக் கூட்டத்தை சேலம் மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று திமுக முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.