திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

0
119

சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆனது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத்தில் மாவட்ட செயலாளர்கள் இடையே பேசிய ஸ்டாலின் நம் கட்சியின் கூட்டணி தற்போது இருப்பதை போலவே எதிர்வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆகவே நானும் இதையே விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதேபோல பாண்டிச்சேரி மாநிலத்திலும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் புதுச்சேரி திமுகவிற்கும் ஒருசில மனக்கசப்பு ஏற்பட்டது. அந்த மன கசப்பானது தமிழ்நாட்டிலும் ஏற்படுமா என்ற நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்திருக்கிறது.

முன்னதாக உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் நாம் கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் நம்முடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட நாளிலிருந்து, நம் போராட்டம் அனைத்திலும் நமக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இப்படி தோலுக்கு தோலாக நின்ற நம்முடைய கூட்டணி கட்சிகளை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிட்டு இயலாது என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

நம்முடைய கூட்டணியில் இணைவதற்கு மேலும் பல கட்சிகள் என்னிடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு நான் இசைவு அளிக்காமல் இருந்து வருகின்றேன் என்று தெரிவித்த அவர் ,மாவட்ட செயலாளர்களை குறிப்பிட்டு நீங்களும் கூட இந்த கூட்டணி ஆனது நெடுங்காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அதிகமாக கொடுப்பதை நீங்கள் விரும்பவில்லை என்று சொல்கிறீர்கள். தொகுதி பங்கீட்டில் நாம் கூட்டணி கட்சிகளுக்கு எப்படி தொகுதியை பங்கீடு செய்து தந்தாலும் நம் கட்சியை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அதையெல்லாம் தாங்கள் பெரிதுபடுத்தாமல் உங்களுடைய மாவட்டத்திற்கும் நம் கூட்டணி சார்பாக யார் தேர்தலில் நின்றாலும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். நம் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் போட்டியிடவில்லை என்றாலும்கூட, நாம் நம் தொகுதிகளில் நம்முடைய கூட்டணி கட்சியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதோடு சட்டசபை முடிந்த பிறகு விருப்ப மனு தாக்கல் கூட்டம், தேர்தல் வேலைகள், போன்றவை ஆரம்பமாகிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சி மாவட்ட செயலாளர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் அவர்களுக்குக் கிடைக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு அங்கே வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார் என்று தெரிகிறது.