திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?

0
120

திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பை‌ சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரும்ப பெற்றது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டினார். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பை விலக்கி கொள்வது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். இது தமிழ் ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் திமுக, விடுதலை புலிகளை சுட்டிக்காட்டி பேசியது கடும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டனத்தை தெரிவித்தார், இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக போன்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்காமல் இருந்தன.

இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு திமுகவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் தேசத்தின் காவலர்கள்.சிங்கள பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம் மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்து விட்டதாக அறிவித்த பிறகும், விடுதலைப்புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என்று திமுகவிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திருமாவளவன் திமுகவிற்கு எரிச்சல் ஊட்டினார், வன்னியரசுவின் இந்த டிவிட்டர் பதிவு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிகிறது.