Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அட போங்கப்பா அவங்க திட்றாங்க! நாங்க வரல திமுக கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு!

திமுக கூட்டணி கட்சிகளுடைய ஊடக கண்காணிப்பு குழுவின் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்பவர்கள் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களை வெளியிடுவதோடு, தனிநபர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றன.

அவர்களுடைய இந்த செயலால் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்களுடைய தரம் குறைந்துகொண்டே செல்கின்றது அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டிய நிலை இருக்கிறது.

ஆனாலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல், தனிநபர் தாக்குதல் போன்றவற்றை தடுக்க வேண்டியதும் ஊடகங்களின் கடமை ஆகும்.

அந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற காரணத்தால் அவர்களுடைய அச்சுறுத்தல் காரணமாக, ஊடகத்தினர் இதில் நடுநிலையாக செயல்பட இயலாத சூழல் நிலவுகின்றது.

ஆனாலும் இதை இப்படியே தொடரவிடுவது தமிழ்நாட்டின் அரசியல் சூழலை கெடுத்துவிடும் என பயப்படுகின்றோம். ஆகவே பாஜக பிரதிநிதிகள் பங்குபெறும் ஊடக விவாதங்களில் திமுக, மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்யப்படுகின்றது, என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Exit mobile version