இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

0
250
#image_title

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது என்பதை திமுக கட்சி உறுதி செய்துவிட்ட நிலையில், மக்கள் நீதிமையத்திற்க்கு ஒரு தொகுதி, காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி, கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி ஆகியவைக்கு தலா ஒரு கட்சி என கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது.

ஆனால் இன்னும் எந்தெந்த தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் திமுக கட்சி போட்டியிடும் என்ற செய்தி வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்
இன்று திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளான நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேர்தல் பணிக்காக அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் சற்று நேரத்தில் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.