வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்!
சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில் அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அதனைத்தொடர்ந்து பல வாக்குசாவடிகளில் சில கொளறு படிகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.அந்தவகையில் நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதியில் வாக்களிக்க வந்த ஆனந்த் என்பவர் குடித்துவிட்டு அரிவாளால் வாக்களிக்கும் பெட்டியை சரமாரியாக தாக்கினார்.அந்த பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட வந்த கோவை தொண்டமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி காரின் மீது அடையாளம் தெரியாத அதிமுக தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர் என திமுக சிவசேனாதிபதி கார்த்திகேயன் குற்றம்சாட்டியுள்ளனர்.அவர்கள் தாக்குவதை பார்த்து போலீசார் அமைதியாக இருந்தனர் என கூறினார்.அதுமட்டுமின்றி போலீசார் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் கண்டுகொள்ளாமல் இருந்து செயல்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருந்தார்.
அதன்பின் காலை 7 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,செல்வபுரம் வாக்குச்சாவடிகளை பார்க்க வந்தபோது அதிமுகவினர் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள்,அவர்களோடு பாஜகவினர் ஆகியோர் மிரட்டல் விடுத்து தன்னை தாக்க முயற்சித்தனர்.அப்போது அங்கு நடந்த தகராறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இரு காவலர்கள் வேடிக்கை பார்த்தனர் அதனால் அவர்களை மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
அதுமட்டுமின்றி அதிமுகவில் அடையாளம் தெரியாத நபர்கள் போலீசாரின் லத்தியை வாங்கி தாக்கினர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.காவல் துணை ஆய்வாளர் ஸ்டாலின் வந்த பிறகு தான் இருவருக்குமிடையேயான தகராறு கட்டுக்குள் வந்தது என்றுக் கூறினார்.இந்த சம்பவத்தால் வாக்கு பதிவு பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றார்.இதனைத்தொடர்ந்து ஐஜி,காவல் துணை ஆய்வாளர் என அனைவரிடமும் புகாரளிக்க உள்ளேன் என்றுக் கூறினார்.