திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த சூழ்நிலையில், அவரை கடுமையாக எதிர்க்கும் விதமாக கோ பேக் மொடி என்ற போராட்ட முழக்கத்தை முன்வைத்து திமுக தெருமுனை முதல் சமூகவலைதளம் வரையில் போராட்டம் நடத்தியது.
ஆனாலும் தற்சமயம் தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி என்ற நிலையை அடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரவிருக்கும் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக தயாராகிவருகிறது தமிழக அரசு. இது தொடர்பான கேள்விக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பதில் அளித்தபோது அவர் தெரிவித்ததாவது மோடி எங்கள் எதிரி அல்ல இந்துத்துவவாதி தான் எங்கள் எதிரி இப்போது பிரதமராக அவரை வரவேற்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அவருடைய இந்தக் கருத்தை நாம் ஒரு நோக்கி பார்த்தால் இந்துத்துவாவாதிகள் பிரதமர் நரேந்திர மோடி திமுகவிற்கு எதிரி என்று தெரிவித்திருக்கின்றார். இவருடைய கருத்தில் இருக்கும் சூட்சமத்தை கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அப்படிப் பார்த்தால் பிரதமர் நரேந்திர மோடி இந்துத்துவா வாதியாக திமுகவிற்கு எதிரி என்று சொன்னால் ஒட்டுமொத்த இந்து மதத்தையும் திமுக எதிர்க்கிறதா? என்ற சந்தேகம் எழ செய்கிறது. தற்செயலாக அவர் இந்த கருத்தை தெரிவித்து இருந்தாலும் கூட இதற்கு முன்பாக பல சமயங்களில், பல இடங்களில், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்துத்துவா கொள்கைகளையும், இந்து மக்களை இழிவு படுத்தும் விதமாக உரையாற்றியிருக்கிறார் என சோல்லப்படுகிறது.
அதோடு அவருடைய கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகளை கொண்டு அவர்கள் மூலமாகவும் இந்துத்துவா கொள்கைகளை இழிவுபடுத்தி இருக்கின்றார் என்கிறார்கள். அதோடு இந்துத்துவா கோவில்களில் இருக்கும் சிலைகள் அசிங்கமானவை என்ற கருத்தும் அந்த கட்சிகளால் முன் வைக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் கோபக் மோடி என்று தெரிவித்தார்கள், ஆனால் அதிகாரத்தில் அமர்ந்தவுடன் பிரதமர் மோடி வருகையை எதிர்க்க மாட்டோம் அவர்கள் பகையாளி அல்ல, விருந்தாளி என தெரிவிக்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும், பகையாளியாக இருப்பவர் ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனது எவ்வாறு என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பகையாளி என்பது விருந்தாளி ஆனது போல நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி பொதுமக்களை ஏமாற்றி கருப்புக் கொடியை கீழே வீசிய கரங்கள் காவிக்கொடி கையிலேந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.