திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!
சட்டப்பேரவையில் மின் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும்,
குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
இரண்டு ஆண்டுகளில் 1,40,649 கள்ளச் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,39,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளத்காக கூறிய அவர்,
இளைஞர்களிடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 74 லட்சம் மாணவர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்றதாக தெரிவித்தார்.
மேலும் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனை சாவடிகள், ஏழு நடமாடும் சோதனை சாவடிகள் நடைமுறையில் உள்ளதாக கூறினார்.