திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு!
தேர்தல் என்று வந்துவிட்டாலே ஜாதி மதம் இனம் என்று பலவாறு ஏதாவது ஒன்றை தொலைத்து விட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வழியாக அரசியல் லாபம் பார்க்க தமிழகத்திலே பல அரசியல் கட்சிகள் காத்துக்கொண்டிருக்கும் அதுதான் இப்போது நடந்து வருகிறது.தமிழகத்தில் இதுவரையில் சாதியை ஒழிக்கப் போகிறோம் ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் திரிகிறார்கள்.ஆனால் அவர்கள் இதுவரையில் எந்த ஒரு ஜாதியும் ஒழிப்பதாக தெரியவில்லை. ஆனால் சாதியை வைத்து தங்களுக்கான அரசியல் லாபத்தைத்தான் பெற்றுக்கொள்கிறார்கள்.
இப்படி தேர்தல் வரும் சமயத்தில் எல்லாம் ஏதாவது ஒரு முறையில் ஜாதியை பற்றி பேசி அதன் மூலமாக வெறுப்புணர்வை தூண்டி அதன் வழியாக தங்களுடைய கட்சியை தமிழகத்தில் எடுத்துக் கொள்வதையே அவர்கள் பிழைப்பாக வைத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த அவலம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும் தமிழகத்தில் மட்டும்தான் ஜாதியை ஒழித்து விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஜாதியை வைத்து ஓட்டு வாங்கும் சம்பிரதாயம் இருந்து வருகிறது. தமிழகத்தை தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அவல நிலை இருந்ததில்லை.
ஆனால் தற்போது அந்த அரசியல்வாதிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் என்ன என்றால் கலப்புத் திருமணம் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து விடும் என்கிற ரீதியில் அவர்களின் பிரச்சாரம் தற்சமயம் இருந்து வருகிறது.இதுவும் கூட தமிழகத்தில் மக்கள் பலமற்ற சில அரசியல் சில்லரைகளின் சூழ்ச்சி என்பதை யாரும் இதுவரை புரிந்து கொள்ளவில்லை.இதுவரையில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் இதன்மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் சில அரசியல் சில்லரைகள்.
இந்த சூழ்நிலையில், ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் ஒரு காணொளியில் பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மேல் ஜாதிபெண்களோடு கீழ்சாதி பையன் உடலுறவு கொண்டால் சாதி ஒழிந்துவிடும் என தெரிவித்திருக்கிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுகவேட்ப்பாளர் எழிலன் தெரிவித்திருக்கிறார்.. அவருடைய இந்த செயலுக்கு தமிழகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டால்.ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்ப்பாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார். ஒருவேளை நடவடிக்கை எடுத்துவிட்டால் அவர்மீது இருக்கும் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.