Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

#image_title

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் வருகிறதே என கேட்டதற்கு, திமுக மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதை எல்லாம் தகர்த்து எரிந்து தான் பணியாற்றி வருவதாக கூறினார்.

நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ கூட வெளியானது அதை யாரும் கேட்பதில்லை, அவர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது அதை யாரும் கேட்பதில்லை என்னை மட்டும் கேள்வி கேட்குறீர்கள் என கூறினார்.

துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அந்த செய்தி பற்றி தெரியாது என தெரிவித்தார்.

Exit mobile version