தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

0
106
#image_title

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் பொன்முடி அவர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டது, பொதுக்கூட்டம் ஒன்றில் “ஓசி… ஓசி பஸ்” என்று பெண்களின் இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கே.என்.நேரு சாத்தூர் ராமச்சந்திரன், அமைச்சர் சேகர்பாபு என அடுக்கடுக்காக திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு உள்ளன.

இது ஒரு புறம் இருக்க, திமுக எம்எல்ஏக்களும் திமுக நிர்வாகிகள் மீதும் பொதுமக்களே குற்றம் சாட்டி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர். பண மோசடி, இடம் மோசடி, நிலம் ஆக்கிரமிப்பு என பல்வேறு அராஜகத்தில் ஈடுபடுவது போலி மதுபானங்கள விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் திமுக நிர்வாகிகள் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து ஊடகங்களிலும்; பத்திரிகைகளிலும் இதுபோன்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது திமுக கட்சி மீது மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது அடுத்தாண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்க கூடும். ஆகையால் திமுகவினர் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பொது மேடைகளில் சற்று பார்த்து பேச வேண்டும் என்றும் அரசியல் விமர்சனங்கள் கருத்து குறி வருகின்றனர்.