Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரம்பலூர் திமுக சட்ட சபை உறுப்பினருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் தமிழகத்தில் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் ஒமைக்ரான் என்று சொல்லக் கூடிய புதியவகை நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது .

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று மற்றும் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரும் அடங்குவார்கள்.

இப்படியான சூழ்நிலையில், பெரம்பலூர் சட்டசபைத் தொகுதியில் திமுகவின் சட்டசபை உறுப்பினர் பிரபாகரனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் சூழ்நிலையில், சட்டசபை உறுப்பினர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version