Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!!

#image_title

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை, தமிழ்நாட்டில் மோடி துணையுடன் எடப்பாடி கும்பல் திராவிட தலைவர்களின் உழைப்பை களவாட முற்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் போலீஸ் போல் காப்பாற்றிவருகிறார் என தாம்பரத்தில் ஆ.ராசா பேச்சு:-

தாம்பரத்தில் திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது,

இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொது செயலாளருமான ஆ.ராசா ,தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிதி நிலை அறிக்கை பற்றி விளக்கி பேசினார்கள்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசும்போது:- பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை என சாடினார்.

15 நாட்களாக நாடாளுமன்ற முடக்கப்பட்டுள்ளது 140 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடாளுமனத்தை முடக்கலாம அதனால் மக்கள் பணம் வீணாகிறது என்றார்.

அதானி மோசடி செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது இதற்கு பதில் தரவேண்டியது தானே அல்லது அவரை கூட்டி சென்றவர்களும் மோசடியாளர்கள் தான் என விமர்சனம் செய்தார்.

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் பிரச்சினை, ஆன்லைன் ரம்மியால் 43 பேர் உயிரிழந்துள்ளனர், நீட் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் உள்ளதுஇவற்றை நாடாளுமன்றத்தில் பேச முடியாமல் நாடாளுமன்றம் முடக்கப்படுள்ளது.

கூட்டணி கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் இங்கு எழுப்பும் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை என்றார்.

திராவிட இயக்க தலைவர்கள் உழைப்பை களவாட மோடி துணையுடன் எடப்பாடி கும்பல் வருகிறது, ஆனால் அவர்களை விரட்ட மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்து போலீஸ் போல் காப்பாற்றுகிறார் என்றார்.

மோடியின் செயல்களுக்கு வல்லரசுகள் பயப்பட்டாலும் இந்தியாவை மதவாத, ஊழல் களில் இருந்து காப்பாற்றும் நிலையான ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என ஆ.ராசா பேசினார்.

முன்னதாக 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளி களுக்கு சக்கர நாற்காலிகள், பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு டேபிள் டென்னிஸ் டேபிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் ,
பெண்களுக்கு குக்கர் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Exit mobile version