Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! திடீர் அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

தமிழ்நாட்டில் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என்று இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன. பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்; உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது அதேபோல தமிழக அரசும் இது தொடர்பாக ஆலோசனையில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், ஜூன் மாதம் 26ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நாளை மாலை 6 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதோடு தவறாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போது தேர்தல் நடக்கும் ஆனால் அது மீண்டும் நோய்த் தொற்று பரவ வழிவகை செய்யும் தற்போது நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை இவ்வளவு வேகமாக பரவிக் கொண்டு இருப்பதற்கு காரணம் சட்டசபை தேர்தல் தான் என்று கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version