சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையின் போதெல்லாம் தடுப்பூசி இன்றியும் முன்னேற்பாடுகள் இன்றியும் இருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு கொண்டு வருவதின் பங்கு குறிப்பாக மருத்துவர்களிடமே காணப்பட்டது. அச்சமயத்தில் மருத்துவர்கள் இரு உடைகளை அணிந்துகொண்டு காற்று கூட உள் நுழைய முடியா அளவிற்கு தங்களை பாதுகாத்துக் கொண்டும், கொரோனா பாதித்த வரையும் கண்காணித்து வந்தனர்.இதில் பல மருத்துவர்கள் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரை விடவும் செய்தனர்.இதனையடுத்து மருத்துவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முன்வைத்தனர்.
அதாவது ஊதிய உயர்வு, மருத்துவம் பணியிடங்களை உருவாக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வந்தனர். அதிமுக அரசு இருந்த பொழுதே மருத்துவர்கள் இக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர். ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. அப்பொழுது ஸ்டாலின் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்களை நேரில் சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீங்கள் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறினார். திமுக தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து 5 மாதங்கள் ஆகிறது. தற்போது திமுக அரசு வந்தும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மருத்துவர்கள் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மதுரையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால், அதற்கடுத்ததாக நவம்பர் 10ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.திமுக ஐந்து மாதங்கள் ஆகியும் நிறைவேற்றவில்லை.சொன்ன சொல்லை மறந்த திமுக என சுற்றுவட்டரங்கள் பேசி வருகின்றனர்.