பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு நாடகமாடும் திமுக…! நடிகை குஷ்பு சாடல்…!

0
146

பெண்கள் அனைவரும் விபச்சாரி என்று திருமாவளவன் பெண்களைப் பற்றி தவறாக பேசி இருக்கின்றார் அவருடைய இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பூ இந்து தர்மப்படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டனர் என இந்துமதம் கூறியதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதனை மிகக் கடுமையாக கண்டித்து இருந்தார்.

ஆனாலும் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று திருமாவளவன் தெரிவித்துவிட்டார் என மிகப்பெரிய எதிர்ப்பு எழத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் காலம் காலமாக பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனப்படும் சனாதனமே அது குறித்து நான் பேசியதை பொய்யாக பரப்புகின்றது விஷ புத்தி கொண்ட சில சமூக விரோத கும்பல் அவதூறுகளுக்கு அஞ்சேல் அணிதிரல் ஆர்த்தெழு ஆணாதிக்கம் அறுத்தெறி ஆதிக்கம் வீழ்த்து என தெரிவித்து.

அவதூறுகளை பரப்புவோர் முகத்திரையை கிழித்தெறிவோம் ஆயிரம் தலைமுறை தலைமுறையாக காலம் காலமாக பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனப்படும் சனாதன நூலை தடைசெய்ய வலியுறுத்தி 24 10 2020 அன்று மாலை 3 மணி அளவில் நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் செய்கின்றது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த சந்திப்பின்போது பெண்களைப்பற்றி திருமாவளவன் பேசியது சரியானதா என்று கேள்வி எழுப்பிய போது பெண்களைப் பற்றி அவர் பேசியது மிகவும் தவறானது என்று தெரிவித்து இருக்கிறார் நடிகை குஷ்பு தங்கள் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் இவ்வாறு பேசியதற்கு காங்கிரசும் திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் குஷ்பு.

மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எந்த ஒரு விஷயமும் தெரிவிக்கப்படவில்லை அப்படி இருந்தால் அதனை திருமாவளவன் நிரூபித்துக்காட்ட வேண்டும் எனவும் இந்த விஷயத்தில் திருமாவளவனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று என் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

எனவே இப்பிரச்சனை பெரிதான காரணத்தினாலேயே அவர் அவசர அவசரமாக போராட்டத்தினை அறிவித்திருக்கிறார் என்றும் நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார்.