Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்த துரைமுருகன் எதற்கு தெரியுமா!

புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்காது நிலையில் அவசர அவசரமாக மூன்று விதமான சட்டசபை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்த பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சிவக்கொழுந்து சகோதரர் ராமலிங்கத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கலக்கும் பாரதிய ஜனதா கட்சி நகர செயலாளர் அசோக்பாபுவிற்க்கும், நியமன சட்டசபை உறுப்பினர் பதவி கொடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சு அமைச்சகத்திலிருந்து துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு உத்தரவு ஒன்று கொடுக்கப்பட்டது.

இவ்வாறான சூழ் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் இந்த செயலுக்கு திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். அந்த விதத்தில் இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடைபெறுகின்ற அறிக்கை ஒன்றில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் 3 நியமன சட்டசபை உறுப்பினர்களின் மத்திய அரசு நியமனம் செய்து இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருக்கிறார்.

சட்டசபையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக செய்யப்பட்டிருக்கும் இந்த செயலிற்கு திமுக சார்பாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல 30 சட்ட சபை உறுப்பினர்களை கொண்டது புதுச்சேரி சட்டசபை என்று தெளிவாக இருக்கின்ற ஒரு சூழலில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று நியமன எம்எல்ஏக்கள் மூலமாக 33 ஆக அதிகப்படுத்தி மக்கள் அளித்த தீர்ப்பை அவமானப்படுத்த நினைத்து வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார். புதுச்சேரி சட்டசபை பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை புதிய சட்டசபை உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரை கூட ஆலோசனை செய்யாமல் இவ்வாறு ஒரு நியமனத்தில் மத்திய அரசு செய்திருப்பது பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருக்கிறது.

புதிதாக அமையப்பெற்றிருக்கும் ஆட்சியில் ஸ்த்திரதன்மை போன்றவற்றை இந்த நியமன சட்டசபை உறுப்பினர்களின் பலத்தை வைத்து நீர்த்துப் போகச் செய்து கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்வதற்கான முதல் படி இந்த நியமன சட்டசபை உறுப்பினர்களின் உத்தரவு என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version