Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக பகை..பாஜக உறவு!! விஜய் போடும் அரசியல் கணக்கு!!

DMK enmity..BJP relationship!! Vijay's political account!!

DMK enmity..BJP relationship!! Vijay's political account!!

பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கட்சி தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மற்ற கட்சியிலிருந்து வந்து தங்களுடைய கட்சியில் இணைந்தவர்களுக்கும் முதல் உரிமை வழங்கப்பட்டதாக பல குற்றங்கள் எழுந்திருக்கின்றன. மேலும் திமுகவை மட்டுமே எதிர்க்கக் கூடியவராகவும் பாஜகவை ஆதரிக்க கூடியவராகவும் விஜய் அவர்களின் செயல்பாடும் பேச்சும் அமைந்தது என மூத்த பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.

விஜய் அவர்களின் இரண்டாம் கட்சி ஆண்டு துவக்க விழாவில் நடந்தது குறித்து மூத்த பத்திரிக்கையாளரிடம் கேட்டபொழுது அவர் தெரிவித்திருப்பதாவது :-

பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பொழுது தன்னுடைய கொள்கைகளையும், கொள்கை தலைவர்களையும் அறிமுகப்படுத்திய விஜயவர்கள் தொண்டர்களுக்கே முன்னுரிமை என்ற முழக்கத்தை வெளியிட்டார். அன்று இருந்த விஜய்க்கும் இன்று இருக்கக்கூடிய விஜய் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் விஜயவர்கள் மும்மொழி கொள்கை குறித்தோ, ஹிந்தி திணிப்பு குறித்தோ பேசாததற்கு காரணம் என்ன என பல தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. மேலும் பண்ணையார்களை அரசியலை விட்டு வெளியேற்றுவோம் என அவர் குறிப்பிட்டிருந்தது எந்த வகையில் நியாயம் எனக் கூட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் பனையூரில் அமர்ந்து கொண்டு மக்களை நேரடியாக சந்திக்காமல் அரசியல் செய்யக்கூடிய விஜய் அவர்கள் எவ்வாறு மற்றவர்களை இவ்வாறு குறை கூறலாம் என்பதே. மேலும் விஜய் அவர்களின் உடைய நடவடிக்கையானது பாஜகவிற்கு துணை போவது போல் அமைந்திருப்பதாகவும் ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை போன்றவை திராவிட மாடலுக்கு எதிரானதாக இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் பாஜகவை ஆதரிப்பது திராவிட மாடலுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய செயல் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version