திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி சார்ந்தவர் திமுக நிர்வாகி அருண்குமார் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அருகில் திமுக நிர்வாகி அருணை மடக்கிய மர்ம கும்பல் அவர் மீது மிளகாய் பொடி தூவிவிட்டு அரிவாளால் வெட்டி உள்ளார்கள் இதனால் பலத்த காயமடைந்த அருண் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி அருணின் உறவினர்கள் பழனி திருச்சி ஆகிய சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் சாலை மறியலில் ஈடுபட்ட அருணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனை அடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் குற்றவாளிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதிபட தெரிவித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.