Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருப்பாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம்,திமுக இளைஞரணி நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி புகார் அளித்தார்.

பெண் காவலர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.மேலும் சாட்சியங்களையும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பெண் காவலர் கூறியது போல சிசிடிவி காட்சிகளும்,சாட்சிகளும் அந்த நிர்வாகிகளுக்கு எதிராக இருந்ததன் அடிப்படையில்,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு பேரையும், காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கட்சியின் கோட்பாட்டை மீறியதுடன் கட்சிக்கு அவபெயர் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதன் காரணத்தினால் அந்த இரண்டு நபர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Exit mobile version