Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி

DMK is under attack

DMK is under attack

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி!!

திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது துறையான நீர்வளத்துறை சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்த சென்றிருந்தார், அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வை மேற்கொண்டார்.

தனது துறை ஆய்வை முடித்துக்கொண்டு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற பொது அமைச்சர் துரைமுருகனை வரவேற்க திமுக தொண்டர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டச்செயலாளரும்  திமுக செயலாளருமான அப்துல் வகிப் தலைமையில் ஒரு கோஷ்டியும்,  திருநெல்வேலி மேயர் சரவணன் தலைமையில் ஒரு கோஷ்டியும் அமைச்சர் துரைமுருகனை போட்டி போட்டு கொண்டு வரவேற்றனர்.

அமைச்சர் துரைமுருகனின் வரவேற்பில் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இந்த மோதலில் இரு பிரிவினரும் அமைச்சரின் கண் முன்னே ஒருவரையொருவர் தாவி தாவி சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்ப்பட்டது, கூட்டம் கலைந்து சென்றதும் அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசினர் இல்லத்தில் ஓய்வு எடுக்க சென்றார்.

Exit mobile version