DMK பைல்ஸ் -3 புத்தாண்டு அன்று வெளியிட்டு!! அண்ணாமலை அறிவிப்பு!!

0
76
DMK files-3 released on new year!! Annamalai Announcement!!

பாரதிய ஜனதா மாநில தலைவராக அண்ணாமலை பதவிக்கு வந்த பிறகு திமுக முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார் ஏற்கனவே டிஎம்கே பையில்ஸ்-1, பையில்ஸ்-2  என இரண்டு பட்டியலை வெளியிட்டு அண்ணாமலை அடுத்த டிஎம்கே பையில்ஸ்-3  வெளியிட தயாராகி வருகிறார். அதனை வரும் புத்தாண்டில் அதை வெளியிடுவேன் என்றும் சமீபத்தில் அவர் அறிவித்தார். அதன்படி அண்ணாமலையால் இதற்கென்று அமைத்த சிறப்பு குழு தமிழக முழுதும் அனைத்து துறைகளிலும் நடந்த ஊழல் விவரங்களை திரட்டி கொண்டுள்ளது. ஆங்காங்கே இருக்கும் பாரதிய ஜனதா முக்கிய பிரமுகர்களும் விவரங்களை திரட்டுகின்றனர்.

இந்த விஷயம் வெளியேறு கசிந்ததால் திரட்டப்படும் புதிய பட்டியலில் தங்கள் பெயரோ நிறுவனமும் இருக்கிறதா என்பதை அறிய தமிழக முழுதும் இருக்கும் தனியார் காண்ட்ராக்டர்கள் பாரதிய ஜனதாவை பெரும் தலைகள் மூலம் விவரம் அறிய முயற்சிப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. பொதுப்பணி, உள்ளாட்சி, சுகாதாரம், மீன் வளம், சமூக நலத்துறையின் பல துறைகள் மூலம் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு இத்திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.  திட்டங்கள் அரசு தரப்பில் தீட்டப்பட்டாலும் அதை முழுமையாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொறுப்ப தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

குறிப்பாக நெடுஞ்சாலை துறை மூலம் போடப்படும் அனைத்து சாலைகளும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுப்பணித்துறை மூலம் நடக்கும் அரசு துறைகளுக்கான அனைத்து கட்டுமான வேலைகளையும் தனியார் ஒப்பந்ததாரர்களிடமே அளிக்கின்றனர். சமூக நலத்துறை திட்டங்களிலும் தனியார் ஒப்பந்ததாரர்களை ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்படி தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்க அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் ஏகப்பட்ட பணத்தை லஞ்சமாக பெறுகின்றனர். இதனாலே தரம் இல்லாத பணிகள் நடக்கின்றன.

அமைச்சர்களை கடந்து ஒப்பந்ததாரர்கள் அளிக்கும் லஞ்சப்பணம் பாய்கிறது. இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டும் என்பதற்காகத்தான் ஊழல் ஆதாரங்களை சேகரித்து வருகின்றேன். தொடர்ச்சியாக பையில்ஸ்  என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட வருகிறார் வரும் புத்தாண்டில் வெளியிடவுள்ள பையில்ஸ்-3 ஆதாரம் மற்றும் ஆவணங்களை திரட்டும் பணி நடந்து கொண்டு உள்ளது. இதனால்  தமிழக ஒப்பந்ததாரர்கள் பலரும் பதற்றம் அடைந்திருப்பதாக பாரதிய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அண்ணாமலை திரட்டும் ஆதாரங்களில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை அறிய படாத பாடுபடுகின்றனர். இந்த தகவல்கள் அறிய  பாரதிய ஜனதா தலைவர்கள் மூலம் தகவல் திரட்டு முயற்சி உள்ளனர். இதை அறிந்த அண்ணாமலை தகவல்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் கசிந்து விடக்கூடாது என ஊழல் தகவல் திரட்டுவோருக்கும் விவரங்கள் அறிந்த பாரதிய ஜனதா முன்னணியின் இருக்கும் என அக்காட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.