Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடு கொரோனா தொற்றால் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் ஜி.பி. வெங்கிடு (வயது 86). கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோபி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version