மகனின் முடிவால், மனமுடைந்து தற்கொலை செய்த பெற்றோர்!

0
145

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், மெதுகும்மல் மேக்கவிளை பகுதியை சேர்ந்தவர் சகாயம் (வயது60). இவர் தி.மு.க. கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தார். 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தவர். கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார்.

இவருடைய மனைவி சுகந்தி (58), இவர்களுக்கு டிபுரோகிலி என்ற மகனும் இருந்தனர். டிபுரோகிலி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்து விட்டு அங்கேயே ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்தார்.

இந்தநிலையில் தான் கடந்த ஆண்டு முன்பு பெங்களூருவில் நிகழ்ந்த ஒரு விபத்தில் சகாயத்தின் மகன் டிபுரோகிலி இறந்து விட்டார். தங்களது ஒரே மகனின் மரண செய்தியை கேட்டு சகாயமும் அவரது மனைவியும் மிகவும் நொடிந்து போயினர்.

இதனால், கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். சகாயம் அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகி மனமுடைந்து காணப்பட்டார். அவர் தனது தொழிலிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

 

இந்தநிலையில் தான் கடந்த இரண்டு நாட்களாக சகாயத்தின் வீடு பூட்டியே இருந்தது. இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே விளக்குகளும் எரியவில்லை.

இதனால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து இதனால் அவர்கள் சகாயத்தின் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே ஒரு அறையில் சகாயமும் அவரது ,மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டை சோதனையிட்டபோது இருவரும் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது, அதில் எங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் தங்களது ,மகனை இழந்த துக்கத்தினால் மகன் சென்ற இடத்துக்கே செல்கிறோம் என எழுதி கையெழுத்திட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.