தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது, இதனை தொடர்ந்து தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது, இதனையடுத்து சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்யதொடங்கிவிட்டார்கள் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கின்றன.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, செல்வபெருந்தகை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் வார்டு பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடந்ததாக சொல்லப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்ததாவது, தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 நாட்களில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி எத்தனை வார்டுகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுகொண்டிருக்கிறது நாங்கள் கேட்ட இடங்களை கொடுப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக திமுக தரப்பில் உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்ற பகுதிகளில் வார்டுகளை கேட்டிருக்கிறோம். எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்ற பகுதிகளில் வார்த்தைகளை கேட்போம் வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளை கேட்டுப்பெருமாறு மாவட்ட நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியிருக்கின்றோம் என கூறியிருக்கிறார்.
ரிசர்வ் வங்கி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை அவர்கள் வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களா என்ன? தமிழ் தெரிந்தவர்கள் தானே அவர்கள் அமர்ந்திருந்தது கண்டிக்கத்தக்கது. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.