பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

0
176
Dr Ramadoss with MK Stalin

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ஆட்சியிலிருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் தவறாமல் செய்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி.அந்த வகையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ என எதுவாக இருந்தாலும் ஆளும் அரசின் தவறுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தவறாமல் சுட்டி காட்டி வருகிறார்.

அதே போல ஆளும் அரசுக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆலோசனையாக கூறி வருகிறார்.அந்த வகையில் ஆண்டு தோறும் தமிழகத்திற்கான மாதிரி பொது பட்ஜெட்டை பாமக சார்பாக வெளியிட்டு வருகிறார்.அதே போல விவசாயத்திற்கும் மாதிரி தனி பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறார்.அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த போதும் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டை குறிப்பிட்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போது புதியதாக பதவியேற்ற திமுக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக தங்களுடைய கனவு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக பாமகவினர் பாராட்டி வருகின்றனர்.கடந்த காலங்களில் பாமக வெளியிடும் பல்வேறு அறிக்கைகளை அப்படியே அடுத்த சில மணி நேரங்களில் திமுகவும் வெளியிடும்,அதே போல மக்கள் நலன் சார்ந்து பாமக தொடுக்கும் பல வழக்குகளில் திமுகவும் இணைந்து கொள்ளும்.

அந்தவகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் திமுக அளித்திருந்தது.ஆனால் பல வருடங்களாக வேளாண்மைக்கு தனி மாதிரி பட்ஜெட்டை பாமக சார்பில் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் திமுக செயல்படுத்தும் இந்த திட்டத்திற்கு முன்னோடியாக பாமகவின் செயல்பாடு அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்பதை தற்போது தமிழக அரசு தீவிரபடுத்தியுள்ளது.இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேளாண் பட்ஜெட் தொடர்பாக, விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்திட வேண்டும் எனவும், விவசாயம் செழிக்கவும் விவசாயிகளின் உழைப்புக்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில், வேளாண் பட்ஜெட் இருக்க வேண்டும், எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.