Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து உடன்பிறப்புகளுக்கு திமுக வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த மாதம் இறுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மணி அளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டது.

இந்த செய்தி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திமுக தனது கழக உடன்பிறப்புகளுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திமுகவின் கொடி அரை கம்பத்தில் பறக்க வேண்டும். மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கான திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு பேராசிரியர் அன்பழகனுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் கழக உடன்பிறப்புகள் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கூடி வருகின்றனர்.

Exit mobile version