தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

0
133

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

சென்னை : ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் , ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமான மேகதாது அணை விவகாரம், பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு,சொத்து வரி, மின் கட்டணம் ,வாகனப் பதிவு, பத்திரப் பதிவு ஆகியவற்றின் கட்டண உயர்வை முன்னெடுத்து தி.மு.க. அரசுக்கெதிராக கண்டன குரல் கொடுத்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியது

ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யாத தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியத்திற்கும் கீழ் ,டாஸ்மாக் வருவாயை நம்பி பிழைப்பு நடத்தும் அரசு செய்த சாதனை தொடர்ந்து 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தியது மட்டுமே மேலும் இதுபோன்ற சாதனையை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கமுடியாது,வேங்கைவயல் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டிவேடிக்கை பார்த்து கொண்டிருந்த முதல்வர் தற்பொழுது மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்போகிறேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும்போது முதல்வர் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார் போல.

மேலும் , மணிப்பூரை ஆளும் ப.ஜ.க. அரசு மற்றும் மத்திய அரசு இப்பிரச்சனையை சரிசெய்துவிடுவார்கள்.நீங்கள் தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை பற்றி மட்டும் சிந்தியுங்கள்.தமிழகத்தில் தான் தீவிரவாதம் அதிகரித்து தேசத்துரோகிகளின் புகலிடமாக உருவெடுத்துள்ளது என்று அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.மேலும் பேட்டியின் போது ஏரளமான பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.