திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்!
திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது முந்தைய ஆட்சியை விட தற்பொழுது திமுக நடத்தும் ஆட்சியானது நல்லாட்சி என்று மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தி வருகிறது.முதல் முறையாக வரலாற்றிலேயே இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனால் பெட்ரோல் விலை ,மகளிர் சுய உதவி கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.அதனையடுத்து முதன்முதலாக விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் சிறு விவசாயிகள் முதல் அனைவரும் பயனடைந்தனர்.
ஏனென்றால் நெல் சாகுபடிக்கு விலை உயர்த்தி கொடுத்தனர் மேலும் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும் உயர்த்தி கொடுத்தனர்.அதனையடுத்து இன்று நீர்வளத் துறை ரீதியான மனு கோரிக்கைகளும் விவாதம் செய்யப்பட உள்ளது.இதனிடையே எதிர்க் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழல்கள் பற்றியும் விவாதம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. குறிப்பாக கொடநாடு கொலை விவகாரம் பற்றி இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசப்படுவதாக கூறுகின்றனர்.இதனை அறிந்த அதிமுக மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது.இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்ற நோக்கில் அதிமுக அரசு இதனைப்பற்றி சட்டப்பேரவையில் பேச கூடாது என்று தொடர்ந்து இதனை குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார்.
அதில் அவர் கூறியது ,தமிழ்நாட்டில் அதிக அளவு தேவைகள் உள்ளது அதனை பற்றி விவாதிக்காமல் கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிப்பது மரபை மீறிய செயல் என்று கூறினார்.மேலும் நீதிமன்றத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்றும் கூறினார்.கொடநாடு விவகாரம் அவசரமாக தற்போது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமா என்று கேள்வி கேட்டார் ஆளும் கட்சி இவ்வாறு செய்வது எதிர்க்கட்சி தலைவருக்கு மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கின்றது என்று கூறினார். இவர்கள் இவ்வாறு கூறுவது பார்த்தால் இந்த விவகாரத்தில் இருந்து அந்தர் பல்டி அடிப்பது போல் உள்ளது என அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.