உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!!                      

0
811
DMK is falling!!

உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!!

இம்முறை நாடாளுமன்ற தேர்தலானது பாஜக அதிமுக பாமக என்று தனித்து நின்றாலும் சில தொகுதிகளில் நேருக்கு நேரான மோதல் சற்று சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அந்த வகையில் வேலூர் தொகுதியில் கடந்த முறையை போலவே இம்முறையும் திமுக சார்பாக கதிர் ஆனந்த போட்டியிட உள்ளார்.

இவருக்கு எதிராக பாஜக கூட்டணியில் ஏசி சண்முகம் நிற்க உள்ளார்.இவர்களின் போட்டி தான் வேலூர் தைகுதியையே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இம்முறை கதிர் ஆனந்திற்கு வாய்ப்பு கிடைக்காது என்று பலரும் கூறி வந்தனர்.ஏனென்றால் இவர் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.இதனை எதிர்க்கட்சிகள் தங்களது வசமாக பயன்படுத்திக் கொண்டு பல எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இருந்த போதிலும் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுகம் தனது மகனுக்கு எப்பேர்பட்டாவது சீட் வாங்கி கொடுத்து விட்டார்.தனது மகன் நேரடியாக களத்தில் இறங்குவதால் பல வேலைகளை இந்த தொகுதியில் தீவிரமாக செய்து வருகிறார். அந்த வகையில் அந்த தொகுதி மக்களிடம் அழுது புலம்பவும் ஆரம்பித்து விட்டார். மேற்கொண்டு வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அமைச்சர் என்று கூட பாராமல் வேலூரில் உள்ள கன்னிகாபுரம் மக்கள் உள்ளே வரக்கூட அனுமதிக்கவில்லை.

பல காலமாக இங்கு மக்கள் கேட்டு வந்த கோரிக்கைகளை எதையும் நிறைவேற்றாததினால் இவ்வாறான செயலை செய்துள்ளனர்.இது குறித்து காவல்துறை மற்றும் நிர்வாகிகள் உட்பட பலரும் சமாதானம் செய்தும் மக்கள் ஒருமித்த ஒப்புதலுக்கு கூட வரவில்லை.

இதனால் அங்கு சென்று வாக்கு சேகரிக்க முடியாமல் வந்தபடியே துரைமுருகன் அவர்கள் சொல்ல நேரிட்டது.இது குறித்த செய்தியானது தற்பொழுது தீவிரமாக பரவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக அத்தகுதி ஒன்றிய செயலாளர் என்று கூறுகின்றனர்.எனவே ஒட்டுமொத்த பார்வையும் தற்பொழுது அவர் மீது திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வாக்கானது சரிய தொடங்கியுள்ளது என்பதை கண்கூட பார்க்க முடிகிறது.