ஒவ்வொரு பொருளுக்கும் வரிவிதிப்பதற்காக அமைச்சர்கள் குழு ஓராண்டு காலமாக ஆலோசனை நடத்தி வருகிறது அதன்படி, ஒவ்வொரு பொருளுக்கும் நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஏழைகள் பயன்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களான சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு ஜன்தன் கணக்கு போன்றவற்றில் குறைந்தபட்சம் இருப்பு இல்லாவிட்டாலும் கூட எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படாது. பல்வேறு வரவேற்புகளை பெற்று வரும் புதிய திட்டமான விஸ்வகர்மா திட்டம் பல மக்களுக்கு உபயோகமாக இருக்கிறது.
இந்த விஸ்வகர்மா திட்டத்தை ஜாதியுடன் ஒப்பிடாமல் தொழிலாக பார்க்க வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகையான தொழில்கள் அடங்கியுள்ளது.எனவே அவர்கள் அனைவருமே தொழிலாளர்கள் தான். ஆனால் ஒரு சிலர் இதனை ஜாதியுடன் ஒப்பிட்டு பார்த்து மத்திய அரசால் கிடைக்கும் பல திட்டங்களை தடுக்க பார்க்கின்றார்கள்.
மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மாநிலத்துக்கான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகளை பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் திராவிட அரசியல் என்ற பெயரில் பலவகையான நல்ல திட்டங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இங்கு ஜாதியால் பள்ளி குழந்தைகள் முதற்கொண்டு அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். அரசு பள்ளிகள் தான் உயர்ந்தது என கூறிவிட்டு பல எம்பிக்கள் கேந்திரிய வித்யாலாயாவில் அவர்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கு என்னிடம் அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள்.
சென்னை மெட்ரோ திட்டத்திற்காக கூட மத்திய அரசு ஜைக்கா, ஏ.ஐ.ஐ.பி,என்.டி.பி,ஏ.டி.பி போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 21ஆயிரத்து 560 கோடி ரூபாயை பெற்று தந்துள்ளது.
ஆனால் அதனையும் செயல்படுத்த முடியாமல் பாதி தொகையை மட்டுமே பயன்படுத்திவிட்டு மத்திய அரசின் மீது பழியை போடுகிறார்கள். மாநில அரசால் சில செயல்களை செய்ய முடியவில்லை என்றால் அதனை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறோம். என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.