Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் குழந்தை பெறாததற்கு திமுக தான் காரணம்-ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும், சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெறுகிறது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர், நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா.? சோதனைக்குழாய் குழந்தை என பெயர் பலகைகள் வைத்துள்ளனர்.

1967 க்கு பிறகு கலைஞர் கருணாநிதி தான் மதுபானக்கடையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். சாராயக்கடைகளாக தொடங்கிய இவை தற்போது வெளிநாட்டு மதுபான விற்பனை என ஏராளமான மதுபான கடைகள் ஆக மாறிவிட்டன.

இந்த மதுபான கடைகளால் அவனவன் தனக்கு பிள்ளை பெற முடியாமல் போய்விட்டது. ஆகையால் மதுபான கடைகளை முழுவதுமாக அகற்றி அவனவன் பொண்டாட்டிக்கு அவனவன் பிள்ளை பெற மதுபான கடைகளை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version