Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யாருடா நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க? திமுகவின் உடன்பிறப்புகளை கதறவிட்ட நிர்வாகி!

சிறுபான்மை மக்களின் ஒரே பாரத பிரதமர் எங்களுடைய தளபதி மட்டுமே என போஸ்டர் அடித்து திமுகவினரை கதிகலங்க வைத்திருக்கிறார் ஜே எம் பஷீர்.

சரி யார் இந்த பஷீர்? அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார், ஆனால் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுகான வாக்கு வங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தபோது சட்டத்திற்கு ஆதரவாக தங்களுடைய கட்சி எம் பி ஐ வைத்து வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் எடப்பாடி பழனிச்சாமி என்ற தனிமனிதர் முதலமைச்சராக தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக, முஹம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கவில்லை இன்று வந்த திமுக அரசு சட்டசபையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை கிடையாது, அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். அதோடு அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அன்று பிற்பகல் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட பஷீரை சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து மட்டுமல்ல கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள்.

அந்த சமயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு பன்னீர்செல்வம் தன்னுடைய வாகனத்திற்கு செல்லும்போது சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து அவரை சந்தித்து உரையாற்றியதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்து வந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வத்தை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதன்பிறகு திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார் என்றும், தெரிவிக்கப்படுகிறது. திமுகவில் அவருக்கு சிறுபான்மை உரிமை பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பஷீர் வெளியிட்டிருக்கின்ற ஒரு சுவரொட்டி திமுகவை சார்ந்தவர்களையும் மிரள வைக்கும் விதமாக இருக்கிறது.

அந்த சுவரொட்டியில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் என் ஆர் சி, சி ஏஏ என்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து இந்தியா முழுவதும் இருக்கின்ற சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒரே முதலமைச்சர் என்றும், இனி இந்திய சிறுபான்மை மக்களின் ஒரே பாரதப்பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே என்றும், எழுதி திமுகவின் உடன்பிறப்புகளுக்கு கடுமையான போட்டியை உண்டாக்கி இருக்கிறார். இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வச்சு செய்து வருகின்றார்கள் நெட்டிசன்கள். வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்ற லிவிங்ஸ்டன் திரைப்பட டெம்பிளேட், யார்ரா நீங்கல்லாம்? என்று திமுகவினர் கேட்பது போலவும் மீம்ஸ்கள் பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார்களாம் நெட்டிசன்கள்.

Exit mobile version