அதிமுகவுடன் கை கோர்க்கிறதா திமுக! உச்சகட்ட அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

0
156

7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தயார் என்று அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது  சட்ட மசோதா தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. ஆனாலும் இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு ஒப்புதலும் அளிக்கவில்லை.

இதனையடுத்து ஆளுநரின் பரிசீலனையில் சட்ட மசோதா இருக்கின்றது அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கும் வரையில் கலந்தாய்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது இதனிடையே தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் அன்பழகன் மற்றும் விஜயபாஸ்கர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அந்த சந்திப்பின்போது இந்த சட்ட மசோதாவின் மேல் விரைவாக நல்ல முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதிபட தெரிவித்தார் என்று அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்க கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இது சம்பந்தமாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றேன், இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட திமுக தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பதிவு செய்து இருக்கிறார்.