Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்… முக்கிய தொகுதியில் திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…!

Stalin

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகிய பணிகளைத் தொடர்ந்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை ஒரே கட்டமாக திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். சில தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த திமுகவினர் அங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

DMK

அதேபோல் வேட்பாளர்கள் மாற்றி அறிவிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாக ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் உண்மையில் அவருடைய பெற்றோர் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் என்பதால் ஜீவா ஸ்டாலின் பட்டியலினத்தில் சேர மாட்டார் என உட்கட்சியிலேயே பூசல் வெடித்தது. இதையடுத்து ஆத்தூர் தனி தொகுதி வேட்பாளராக ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சின்னதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திமுகவின் சார்பாகப் போட்டியிட, ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது, கு.சின்னதுரை பி.இ., ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என திமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version