வன்னியர் வாக்குகளை கவர ஸ்டாலின் அளித்த வாக்குறுதி! கை கொடுக்குமா?

0
160
DMK Leader MK Stalin Master Plan to Get Vanniyar Votes

வன்னியர் வாக்குகளை கவர ஸ்டாலின் அளித்த வாக்குறுதி! கை கொடுக்குமா?

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர்.அதே போல திமுக கூட்டணியில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக மற்றும் மதிமுக இணைந்து போட்டியிடுகின்றன.மக்கள் நீதி மைய்யம்,சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஒரு அணியாகவும்,அமமுக மற்றும் தேமுதிக ஒரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை கவர பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு இலவச சலுகைகளை இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளன.அடுத்தபடியாக அதிமுக அரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது அந்த சமுதாய வாக்குகள் அதிமுகவிற்கு சாதமாக அமைய வாய்ப்புள்ளதாக கருதபடுகிறது.

இதனையடுத்து திமுகவின் வாக்கு வங்கியான வன்னியர்களின் வாக்குகளை கவர அக்கட்சி தலைமை திட்டமிட்டது.ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த உள் ஒதுக்கீடு குறித்தும்,வன்னியர்களுக்கு எதிராவும் பேசியதால் சிக்கல் அதிகமாகியது.இதனால் நிலைமையை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் தானே களத்தில் இறங்கி வன்னியர் வாக்குகளை கவர முயற்சித்துள்ளார்.

அந்த வகையில் திண்டுக்கல்லில் நடந்த அந்த கட்சியின் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கிறிஸ்துவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் மற்றும் வேடசந்தூர் திமுக வேட்பாளர் காந்திராஜனை உள்ளிட்டோரை ஆதரித்து வடமதுரையில்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர்  பேசுகையில், “கிறிஸ்தவ வன்னியர்கள் என்னை  நேரில் சந்தித்து ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்களின் இந்த கோரிக்கையானது திமுக ஆட்சி அமைந்ததும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றபடும் என்றும் தெரிவித்துள்ளார்.