சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின்
சாதிய பாகுபாட்டை பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஆறாம் வகுப்பிற்கான கேள்வித்தாள் ஒன்று வெளியாகி பரவி வந்தது. அதில் இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய சட்ட மேதையான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையிலும், அதேபோல், தலித் என்றால் யார் என்று கேள்வி கேட்டு அதற்கு தீண்டத்தகாதவர் என்று தேர்வு செய்யும் வகையிலும், மேலும் இத்துடன் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இவ்வாறு சர்ச்சைக்குரிய இந்த கேள்வித்தாளானது கேந்த்ரியா வித்யாலயா பள்ளியில் உருவாக்கப்பட்டது என்றும் வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.
சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
மேலும் இது குறித்து படிக்க : தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்
அவரையடுத்து திமுக கூட்டணி கட்சி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்களும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய அந்த ஆறாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை. எனவே சமூக வலைத்தளவாசிகள் இது போன்ற போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்ட சில அரசியல்வாதிகளை போனில் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அது மட்டுமல்லாமல் பொய் அறிக்கை வெளியிட்ட அரசியல்வாதிகளுக்கு விளக்கம் கேட்டு வேந்திரிய வித்யாலயம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் CBSC நிர்வாகமும் இது குறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவிலும் எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய மறுப்பையும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் சாதி மறுப்பு அரசியல் செய்வதாக கூறி கொண்டு முழுமையாக ஆராயாமல் அவசரகதியில் ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிக்கை அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.