பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர் ! எடப்பாடியாரை எதிர்ப்பதால் ஏற்பட்ட பரிதாபம்!?

0
105
DMK leader to tie thread for Beedi! what happened?

பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர்! நடந்தது என்ன?

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது.மக்களிடம் வாக்குகளை சேகரிப்பதில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் இரு பெரிய கட்சிகளும் கூட்டணி கட்சிகள் அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சாரமானது தேர்தல் விழா போல காணப்படுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல நன்மைகள் செய்வோம் என அனைத்து கட்சிகளும் தனது அறிக்கைகளை மக்களின் முன் தெரிவித்து வருகிறது.அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது பழைய யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.அது என்னவென்றால்,மக்களோடு மக்களாக இருப்பதுபோல் தன்னை பாவித்துக் காண்பிப்பது தான்.அதற்காக சாலைகளில் நடந்து வாக்கு சேகரிப்பது,தேநீர் அருந்துவது என மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அரசியல்வாதிகள் இடையில் தனி சட்டத்தையே வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது மநீம கட்சியின் தலைவர் கோவை பிரச்சாரத்தின் போது மக்களோடு மக்களாக தேநீர் அருந்தியும்,பேருந்தில் சென்றும் ,ஆட்டோவில் பயணித்தும் வாக்குககளை சேகரித்து வருகிறார்.அதனையடுத்து சேலம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.அங்கு குறிப்பிட்ட இஸ்லாமிய பெண்கள் பீடி தயாரிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.திமுக வேட்பாளர் சம்பத்குமார் அங்கு சென்று இஸ்லாமிய  பெண்களிடம் அவர்களின் கொறைகளை  கேட்டுக்கொண்டார்.அதன்பின் அவர்ளுடன் சேர்ந்து பீடிக்கு நூல் கட்டி வேலை செய்தார்.இவ்வாறு அவர் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.மக்களின் வாக்குகளை சேகரிக்க மட்டும் தான் இப்படியெல்லாம் செய்வார்கள் அதன்பின் ஆளே அட்ரெஸ் தெரியாமல் காணமல் போய்விடுவார்கள் என அப்பகுதி மக்கள் பேசுகின்றனர்.சிலர் எடப்பாடியாரை எதிர்க்க முடியாமல் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார் என நக்கல் பேச்சும் பேசினர்.