Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினியால் அச்சத்தில் உறைந்த திமுக!

  1. ரஜினி எப்போது அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தாரோ அன்றிலிருந்தே பல அரசியல் கட்சி தலைவர்கள் தூக்கமின்றி திரிகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் திமுகவிற்கு அந்த பயம் சற்று அதிகமாகவே இருக்கின்றது அந்தக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து கொள்ளும் நேரமெல்லாம் ரஜினி தொடர்பாகவே அதிகமாக பேசுகிறார்கள் நிர்வாகிகளே இப்படி இருக்கிறார்கள் என்றால் தலைமையைப் பற்றி கேட்கவே தேவையில்லை ரஜினியின் பயம் அந்த அளவிற்கு அதிகமாக ஆட்டுவித்து கொண்டிருக்கின்றது.

கால் நூற்றாண்டு கால தயக்கத்தை உடைத்து அரசியலில் இறங்க போவதாக சமீபத்தில் அறிவித்தார் ரஜினி.இந்த அறிவிப்பு வெளியானது முதல் பல அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் ரஜினிகாந்த் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்பம் போட்டு வருகிறார்கள் இவர்களுடைய பின்னணி பற்றி ரஜினிகாந்த் சார்பாக ஒரு சிறப்பு குழு ஆராய்ந்து வருகின்றது இதில் தேர்வான அவர்களை தொடர்பு கொள்ளும் ரஜினியின் தரப்பு சிறிது காலம் காத்திருங்கள் முறைப்படி கட்சி ஆரம்பித்ததும் அழைப்பு வரும் என்று தெரிவித்து வருகிறார்களாம்.

ரஜினிகாந்தின் கட்சியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்பவர்களின் திமுகவின் பிறகுதான் அதிகம் என்ற தகவல் அந்த கட்சியின் தலைமையில் சென்று இருக்கின்றது இந்த தகவல் கட்சியின் தலைமையை கூறியிருக்கின்றது முன்னாள் மந்திரிகள் மாவட்ட செயலாளர்கள் உடன் இணைந்து செயல்பட இயலாமல் வேறு வழியில்லாமல் திமுகவில் இருக்கும் கணிசமான பேர் ரஜினிகாந்தின் கட்சிக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.இவர்களையெல்லாம் ஒன்றினைக்கும் வேலையை அழகிரி செய்து வருவதாக சொல்கிறார்கள் முல்லைவேந்தன் முதல் மாலைராஜாவரை ஒரு பெரிய பட்டியலே அழகிரியிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.

அழகிரியின் இந்த அதிரடி போட்டியாக ஸ்டாலின் தரப்பு சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்துவிட வேண்டாம் அடுத்து நம்முடைய ஆட்சிதான் அப்போது உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று கூறி வருகிறார்களாம் சில முக்கிய பிரமுகர்களை ஸ்டாலினே நேராக தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Exit mobile version