தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக கொள்கைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அஜித் தங்கள் பக்கம் கிடைக்க மாட்டாரா? என ஏங்கும் திமுக அதற்காக ஏதாவது முயற்சி செய்து வருகிறது திமுக என பா ஜ க மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக மாநில பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், விஜயின் கட்சி கொள்கைகளை பார்க்கும் போது அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என கூறினார். திமுக கொள்கை போல நீட் விலக்கு வேண்டும் என்கிறார்.
ஒரு காலத்தில் சீமான் பாஜக வின் பி டீம் என்று கூறினார்கள் தற்போது விஜய் யை பாஜகவின் பி டீம் என்று கூறுகிறார்கள். ஒரு கட்சிக்கு எத்தனை பி டீம்? அவர்தான் எங்களை ஒன்றிய அரசு என்று கூறுகிறார் அல்லவா? பிறகு எப்படி அவர் எங்கள் பி டீம் ஆவார்.
அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்த விவகாரத்தில் உண்மை என்ன தெரியுமா ? அவர்கள் தலைகீழாக நின்றால் கூட அஜித் அவர்களுக்கு கிடைக்க மாட்டார். அவர் எப்படியாவது கிடைக்க மாட்டாரா? என முயற்சித்து வருகிறது. மேலும் திராவிடியன் பார்ட்டி வளர்ந்ததே சினிமாவால் தான் என்றும் கூறினார்.