Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2து முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டி ஆர் பாலு அவர்களும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி, பொன்முடி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான இடத்திற்கு வருவது மிக சிரமமான விஷயம் தான். அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரம் இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என்று மக்கள் மனதில் நினைக்கிறார்கள். ஏனென்றால், அண்ணன் தலைவர், தங்கை துணை பொதுச்செயலாளர் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் என்று பலரும் நினைப்பதற்க்கான வாய்ப்புண்டு. எப்படி பார்த்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் அவருடைய இந்த பேச்சுக்கு திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் வாரிசு அரசியலை நோக்கி திமுக என்று தமிழிசை தெரிவிக்கிறார். ஆளுநர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா? 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த பிரிவு வாரிசு அரசியல் கூடாது என்று சொல்லியிருக்கிறது? ஆனால் அரசியலமைப்புச் சட்டம் சரத்து 163 ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி உள்ளது மீறாதீர் என்று ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ளார்.

Exit mobile version