புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் திமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு பொருட்கள் வேண்டாம் என்று தெரிவித்து திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 6 சட்டசபை தொகுதிகளில் அறந்தாங்கி சட்டசபை தொகுதி மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக தெரிகின்றது. இந்த அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த தொகுதியை திமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க கூடாது என தெரிவித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போன்றோர் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சமயத்தில் அந்த இடத்தில் இருந்த திமுகவின் நிர்வாகி ஒருவர் அவர் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தன்னுடைய உடம்பில் தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தார்.இதனால் அங்கே மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளில் இருந்து வந்திருக்கின்ற நிலையில்,தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இந்த தொகுதியை வழங்கக்கூடாது என தெரிவித்து திமுக நிர்வாகிகளை தீக்குளிக்கும் அளவிற்கு போயிருப்பது திமுக தலைமையை வருத்தம் அடைய செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.இதன் காரணமாக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியிலேயே மனவருத்தம் உண்டாகி இருப்பதாகவும், சொல்லப்படுகிறது.